மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
#Breaking: 2 நாட்களில் விலகுகிறது வடகிழக்கு பருவமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு தென்மேற்கு பருவமழை அதிக மழையை கொடுப்பதை போல, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களுக்கு நல்ல மழைக்கான வாய்ப்புகளை உறுதி செய்கிறது.
இதனிடையே வரும் இரண்டு நாட்களில், தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்காசி: குற்றாலம் போறிங்களா? நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை அறிவிப்பு.!
வடகிழக்கு பருவமழை விலகுகிறது
அக். 2024 மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக தொடரும் நிலையில், வரும் நாட்களை வறண்ட வானிலை நிலவும். இதனால் வரும் 48 மணிநேரத்தில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகுகிறது.
இதனால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் என்ற நிலையில், வறண்ட வானிலை மற்றும் பருவமழை விலக்கம் காரணமாக, குளிர்காலம் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #JustIN: இரவு 7 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!