ச்சீ., கருமம்.. லிப்டில் ஆடையை கழட்டி ஆபாச செயலில் இளைஞர்.. தனியாக வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!

ச்சீ., கருமம்.. லிப்டில் ஆடையை கழட்டி ஆபாச செயலில் இளைஞர்.. தனியாக வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!


Chennai Purasaiwakkam Prince Apartment Maid Woman Life Sexual Harassment

சென்னையில் உள்ள புரசைவாக்கம், பிரின்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு காய்கறி டெலிவரி செய்ய, சூளை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்ற வாலிபர் வந்துள்ளார். 

ஆறாவது மாடியில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்த இளைஞர், மீண்டும் லிப்டில் வரும் போது வீட்டு வேலை செய்து வரும் பெண்மணி லிப்டில் இருந்துள்ளார்.

chennai

இருவரும் தனியே லிப்டில் வந்த நிலையில், விக்னேஷ் தீடீரென தனது ஆடைகளை களைந்து ஆபாச செய்கையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி, தான் பணியாற்றி வரும் வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.