சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! என்ன புகார்.?

சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! என்ன புகார்.?


Chennai pookadai si suspended

சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறான கருத்துகள் கடந்த சில வருடங்களாக மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீருடை பணியாளருக்கான நடத்தை விதிகளை மீறி அவதூறு பரப்பிய புகாரில் சென்னை பூக்கடை காவல் ஆய்வாளர் சேகர் என்பவர் மீது மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பூக்கடை காவல் ஆய்வாளர் சேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5 ஆயிரம் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததாக கூறி, அதுதொடர்பாக அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

 இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த பேஸ்புக் ஐடி போலி என சேகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பேஸ்புக் தகவல் உதவி ஆய்வாளர் சேகருக்கு முன்பே தெரிந்திருந்தும் அவர் இது குறித்து எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதால் உதவி ஆய்வாளர் சேகரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.