தமிழகம்

காருக்குள் ரகசிய அறை.. திறந்துபார்த்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி.. காட்டிக்கொடுத்த வாசனை.. பதறிப்போன சம்பவம.!

Summary:

காருக்குள் ரகசிய அறை.. திறந்துபார்த்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி.. காட்டிக்கொடுத்த வாசனை.. பதறிப்போன சம்பவம.!

காரின் ரகசிய அறையில் கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் நேற்று காலை காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்த நிலையில், காரில் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் காவல்துறையினருக்கு காரில் கஞ்சா வாடை அடித்ததால் சந்தேகமடைந்து, சோதனை தீவிரப்படுத்தினர். அப்போது காரில் ரகசிய அறை ஒன்றை உருவாக்கி அதில் பிளாஸ்டிக் கவரில் கஞ்சாவை மறைத்து கடத்திசென்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சாவை கடத்தி வந்த மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் மற்றும் ஸ்டான்லி, ஆந்திராவை சேர்ந்த சீனி என்பது தெரியவந்துள்ளது. 

இதில் முக்கிய நபரான மோகன் குமார் ஆந்திராவில் இருந்து கடந்த ஒரு வருடமாக கஞ்சாவை கடத்தி தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த பின், ரயில் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தது தெரிய வந்துள்ளது.

இதேபோன்ற நேற்றுமுன்தினம் ராஜமுந்திரி பகுதியின் புரோக்கரான சீனி மூலமாக கஞ்சா வாங்கிய மோகன்குமார் ஸ்டான்லி மற்றும் சீனி ஆகிய மூவரும் காரில் தமிழகத்திற்கு வந்த நிலையில், ரயிலில் பார்சல் மூலம் கஞ்சாவை அனுப்புவதற்காக ரயில் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

அப்போதுதான் காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கியதாக விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சாவை இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆந்திர மாநிலத்தில் வாங்கியதாகவும், அதனை இங்கு 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளை கைது செய்த நிலையில், நேரடி விற்பனை செய்பவர்களை விரைவில் கைது செய்வதற்காக திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement