ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கள்ளக்காதல் சர்ச்சை.. கூட்டாளிகளால் ரௌடி கொலை..! காவல் நிலையம் துணிகர சம்பவம்.!
கூட்டாளியுடன் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ரௌடி, கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கொளத்தூர், பாரத் ராஜீவ் காந்தி நகர் 2 ஆவது தெருவில் வசித்து வருபவர் பழனி (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். பழனியின் மீது இராஜமங்கலம், கொளத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் கொளத்தூர் மகாரம் தோட்டம் வழியே பழனி சென்றபோது, காவல் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அவரை இடைமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராஜமங்கலம் காவல் துறையினர், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆதிகேசவன், விக்னேஷ், சரண்ராஜ் ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
ஆதிகேசவன், விக்னேஷ், சரண்ராஜ் ஆகிய மூவரும் பழனி கூட்டாளியாக இருந்து வந்த நிலையில், பழனி கூட்டாளியில் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதுகுறித்து மூவருக்குள்ளும் பிரச்சனை நடந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.