இடியுடன் கூடிய மழைக்கு அறிவிப்பு கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இடியுடன் கூடிய மழைக்கு அறிவிப்பு கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..!


Chennai IMD Weather Update 7 th Aug

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏழாம் தேதியான இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வட தமிழகம், புதுச்சேரி - காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.

எட்டாம் தேதியை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வடதமிழகம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.