தமிழகம்

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்.. தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர்!

ஆன்லைன் விளையாட்டில் தனது பணத்தை இழந்ததால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தக்கரையை சேர்ந்த நித்திஸ் என்ற கல்லூரி மாணவர் ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் தான் வேலைப்பார்த்து வந்த கடையில் ரூ.20 ஆயிரத்தை திருடி விளையாட்டில் கட்டியுள்ளார்.

ஆனால் அவரது மொத்த பணத்தையும் அந்த ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் நித்திஸ் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த முழு தகவல்கள் போலீஸ் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement