35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்.. ஜோடியாக மரத்தில் தூக்கிட்ட பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்.. ஜோடியாக மரத்தில் தூக்கிட்ட பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


Chengalpattu Maduranthakam Illegal Affair Couple Suicide

உறவினர்கள் முறைதவறி கள்ளக்காதல் ஜோடியான நிலையில், சொந்தக்காரர்கள் கண்டிப்பால் மனமுடைந்து ஊர்விட்டு ஊர்வந்து உயிரை மாய்த்துக்கொண்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், சிலவாட்டம் கிராமத்தில் உள்ள வயல்வெளியின் வேப்பமரத்தில் ஆண் - பெண் ஜோடி ஒன்று தூக்கில் பிணமாக தொங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் மதுராந்தகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுராந்தகம் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்கையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சார்ந்த அருள்ஜோதி (வயது 23), சென்னம்பட்டி கிராமத்தை சார்ந்த முத்துலட்சுமி (வயது 35) என்பது தெரியவந்தது. 

Chengalpattu

கடந்த 4 ஆம் தேதி வீட்டில் இருந்து இருவரும் மாயமாகியதாக காவல் நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்க. முத்துலெட்சுமிக்கு திருமணம் முடிந்து கணவர், 3 குழந்தைகள் இருக்கின்றனர். 

சென்னையில் தங்கியிருந்தவாறு அருள் ஜோதி சினிமா துறையில் பணியாற்றி வந்துள்ளார். உறவுக்காரரர்களான இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், முறையற்ற காதலை கண்டறிந்த உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி மதுராந்தகத்திற்கு வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.