தேர்தல் நேரத்தில் ஓவராய் பேசிய செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

தேர்தல் நேரத்தில் ஓவராய் பேசிய செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!



case on senthil balaji

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், திமுக சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, "அடுத்து திமுகஆட்சி அமைந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று, அதாவது 11 மணிக்குமுதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டாரென்றால், 11.05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களாகவே ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்க இருக்க மாட்டான்" என பேசினார்.

Senthil balaji

இந்நிலையில் அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசுதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் நகர காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.