விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் தென் மாவட்ட மக்கள்! ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்!
விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் தென் மாவட்ட மக்கள்! ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த வாரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னை வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் விடுமுறை இந்தவருடம் அதிகநாட்கள் கிடைத்ததால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விடுமுறை முடிந்து அவர்கள், நேற்று முன்தினம் முதலே சென்னை திரும்பி வரத்தொடங்கினர். இதனால் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கு தயாராகினர்.
இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலால் வண்டலூர், பெருங்களத்தூர் இடையே பேருந்துகள் நகர்ந்தபடி நீண்ட நேரம் காத்திருந்தன.
இதனால் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பிவிட்டதால் இனிமேல் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.