தமிழகம்

சாக்லெட் ஆசை காட்டி, பள்ளி சிறுவனை சீரழித்து கொன்ற இளைஞன்! ஆடிப்போன நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Summary:

bus conductor sexually abused school boy

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். அவர் கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்று  வீடு திரும்பிய போது அப்பகுதியில் மினிபேருந்து கண்டக்டராக பணிபுரிந்து வந்த பிரதீப் என்ற 21 இளைஞன் சிறுவனை நிறுத்தி பேசிக்கொண்டு இருந்துள்ளான். மேலும் அவருக்கு வெளிநாட்டு சாக்லேட் வாங்கி தருகிறேன் என்னுடன் வா என கூறி ஆசை காட்டியுள்ளார்.

 இதனை நம்பி அந்த சிறுவனும் பிரதீப்புடன் சென்றுள்ளார் அவர் சிறுவனை அங்குள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார். மேலும் வெளியே கூறி விட்டால் என்ன செய்வது என அச்சமடைந்த பிரதீப் உடனே துணியால் அச்சிறுவனின் வாய் மற்றும் மூக்கை அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
 இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் பதட்டமடைந்து பல பகுதிகளிலும் தேடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில் சிறுவன் எம்ஜிஆர் நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைகாட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

 அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பிரதீப் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தது.மேலும் இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதில் பிரதீப்பிற்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் கட்ட தவறினால் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 


Advertisement