#வீடியோ: பேருந்துநிலையத்தில் நின்றிருந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! வைரல் வீடியோ இதோ..

#வீடியோ: பேருந்துநிலையத்தில் நின்றிருந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! வைரல் வீடியோ இதோ..


bull-attacked-a-women-and-ran-viral-video

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை காளை மாடு முட்டி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியின் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு காளைமாடுகள் சண்டைக்கியிட்டுக்கொண்டிருந்தநிலையில், ஒரு காளை மாடு திடீரென ஆக்ரோஷமாக அங்கிருந்து ஓடியுள்ளது.

அப்போது பேருந்து நிறுத்தம் அருகே, பேருந்திற்காக காத்திருந்த பெண் ஒருவரை முட்டி தூக்கி வீசிவிட்டு அந்த மாடு அங்கிருந்து ஓடியுள்ளது. மாடு திடீரேன தாக்கியதில் அந்த பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.