பாவி.. இது ஒரு தப்பா..? தங்கையை வெட்டிகொலை செய்த அண்ணன்.. வெளியான அதிர்ச்சி காரணம்
பாவி.. இது ஒரு தப்பா..? தங்கையை வெட்டிகொலை செய்த அண்ணன்.. வெளியான அதிர்ச்சி காரணம்

அதிகநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கையை அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா (எ) குட்டி (30) என்ற மகனும், சரஸ்வதி (25) என்ற மகளும் இருந்தனர். நர்ஸிங் படுத்து முடித்துள்ள சரஸ்வதி கவரின் நகை விற்பனை செய்வது, டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்வது போன்ற வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
சரஸ்வதி பார்த்துவந்த வேலை அவரது அண்ணன் குட்டிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் சரஸ்வதி அடிக்கடி யாருடனோ செல்போனில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த குட்டி தங்கையை கண்டித்துள்ளார். இதுபோன்று சரஸ்வதி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதும், குட்டி அவரை கண்டிப்பதுமாக இருந்துள்ளது. இதனால் அண்ணன் தங்கை இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் சரஸ்வதி செல்போனில் பேசிக்கொண்டிருக்க, குட்டி அதை கண்டித்துள்ளார். இந்த முறையும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து குட்டி தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கையை சராமரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சரஸ்வதி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே சடலமாக கிடந்துள்ளார். பின்னர் குட்டி அரிவாளுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
குட்டியிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.