தமிழகம் சமூகம்

கணவனின் தம்பியுடன் மனைவி கசமுசா..! கொழுந்தனுடன் சேர்ந்து புருஷனை தூக்கில் தொங்கவிட்ட அவலம்.!

Summary:

Brother and Wife killed husband over illegal relationship

கணவனின் தம்பியுடன் ஏற்பட்ட தகாத உறவில் தம்பியும், மனைவியும் சேர்ந்து கணவனை கொலை செய்து தூக்கி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். 32 வயதாகவும் கோபிநாத்தின் மனைவி பெயர் கவுசல்யா. இருவரும் நல்லபடியாக குடும்பம் நடத்திவந்ததநிலையில் சமீபத்தில் கோபிநாத் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முதலில் தற்கொலை என நினைத்த போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றியபோது அவரது முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் இரத்தக்கறை இருப்பதை கண்டறிந்தனர். உடனே விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.

கோபிநாத்தின் தம்பி அதாவது சித்தப்பா மகன் கார்த்தி என்பவருடன் கவுசல்யாவுக்கு கள்ள காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம் கோபிநாத்துக்குக்கு தெரியவர அவர் இருவரையும் கண்டித்துள்ளார். கோபிநாத் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த கார்த்தியும், கோபிநாத்தின் மனைவியும் கோபிநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கோபிநாத் உயிரிழக்க, அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காட்ட, அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர். தற்போது கவுசல்யா மற்றும் கார்த்தியை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement