தமிழகம்

தங்கையை காதலித்து மணந்த அண்ணன்.! ஒருவருடத்திற்கு பிறகு நடந்த கொடூரம்.!

Summary:

பாளையங்கோட்டையில் தங்கை முறை உறவு கொண்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையைச் சேர்ந்த காளிராஜ் காளிராஜ் என்பவருக்கும் அவரது சித்தப்பா மகள் மேகலா என்ற இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. தங்கை உறவு முறை கொண்ட மேகலாவை காளிராஜ் காதலிப்பதை தெரிந்த  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த வருடம் காளிராஜும் மேகலாவும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கேபிள் டிவி நிறுவனத்தில் பணி செய்து வரும் காளிராஜ் வேலைக்குச்சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 10-ம் தேதி இரவு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளநிலையில் காளிராஜ் மேகலாவை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த மேகலாவின் குடும்பத்தினர் காளிராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மேகலா தனது அறையில் உள்ள மின்விசிறியில் திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தலைமறைவான அவரது உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement