தமிழகம்

சென்னையில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்? போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய பின்னணிகள்!

Summary:

bomb blast in chennai


சென்னையின் முக்கிய சாலையான அண்ணா மேம்பால சாலையில் மதிய வேளையில் காவல்நிலையம் அருகில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியானது.

இதனிஆயடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஒரு காரை 8 இரு சக்கர வாகனங்கள் பின் தொடர்ந்து செல்வது தெரிந்தது. 

இதனையறிந்த காரும் நிற்காமல் சென்றுள்ளது. விசாரணை செய்தபோது நான்கு இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் அடையாளம் கண்டனர். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில், தென்சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியும், வடசென்னையைச் சேர்ந்த ஒரு ரவுடியும் பழைய வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஒரே காரில் சென்றபொது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். 

ஆனால், அதிர்ஷ்டவசமாக காரின் மீது வெடிகுண்டுகள் விழாமல் சாலையில் விழுந்து வெடித்துள்ளன. இருச்சக்கரவாகனத்தில் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு மாணவர் 17 வயது மட்டுமே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement