அரசியல் இந்தியா

பாஜக தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீச்சு.! 6 பேர் காயம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில், எட்ட

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில், எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். 

அங்கு முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி துவங்கி இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

அங்கு இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் பாஜக தொண்டர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement