திமுகவின் தேனிலவு பயணம் முடிந்தது.. இனிமே பாருங்க எங்களோட ஆட்டத்த - நடிகை குஷ்பூ திமுகவுக்கு எச்சரிக்கை.!BJP Actress Kushboo Pressmeet Today

திமுக அரசுடைய ஹனிமூன் காலமானது நிறைவு பெற்றுவிட்டது, இனிவரும் நாட்களில் திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சி தகுந்த பாடம் புகட்டும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராஜ நகரில் நடைபெற்ற பாஜக தொடக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் குஷ்பூ, பாஜக கொடியை ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு அடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், 

"1980 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. மக்கள் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்திலும் பாஜக கொடி பறக்கிறது. நாங்களும் வேலை செய்கிறோம் என்பதை காண்பிக்கவே, திமுகவினர் ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கடினமான விஷயமே. உலகளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இக்காட்சியில் ஆட்சியில் இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது என்று தான் எண்ணுவார்கள்.

bjp

உலகளவில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து யாருமே பேசவில்லை. இந்தியாவில் பேசுகிறார்கள். உலகம் பொருளாதார மந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தொழில் தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு திமுக சாதகமாக இருக்கிறது. தமிழகத்தின் சொத்து வரி உயர்த்தப்பட்டது தவறானது. அதனை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தும்.

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தமிழக அரசு தனது திட்டமாக கூறுகிறது. மத்திய அரசின் திட்டத்தினால் நல்லது நடைபெற்றால், அதனை தங்களின் திட்டம், தங்களுக்கான வெற்றி என கூறுகிறது. சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசை காரணமாக கூறுகிறது. திமுக அரசின் 6 மாத தேனிலவு முடிந்துவிட்டது. இனி வரும் நாட்களில் பாஜக திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும். நாங்கள் மக்களுக்காக குரல் கொடுப்போம்.