அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. ஒருவர் மரணம்..! உயிருக்கு ஊசலாடும் மற்றொருவர்..! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. ஒருவர் மரணம்..! உயிருக்கு ஊசலாடும் மற்றொருவர்..! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!


Bike hit the bus in chennai and men dead

முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற போது அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சென்னை அருகே பட்டாபிராம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது பட்டாபிராம் தண்டுரை மேம்பாலம் வழியாக அரசு பேருந்து சென்ற நிலையில், இருசக்கர வாகனம், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது.chennaiஇதில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பின் இதுகுறித்து சகவாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.