ஐயோ... நாட்றம் தாங்க முடியல! வீட்டை திறந்த போது கழிப்பறையில் கிடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்!!!



bengaluru-woman-skeleton-found-house-toilet

பெங்களூரு பகலகுண்டே காவல் எல்லைக்குட்பட்ட ஹாவனூர் லேஅவுட் பகுதியில், வீட்டின் கழிப்பறையில் 50 வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாட்ஷாயிணி என்ற அந்த பெண், கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கழிப்பறையில் கிடந்த எலும்புக்கூடு

ஹாவனூர் லேஅவுட்டில் உள்ள வீட்டில் தாட்ஷாயிணி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் கழிப்பறையில் இருந்து தாட்ஷாயிணியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பகலகுண்டே போலீசார் அங்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: எலும்புக்கூடாக கிடந்த தாய்! ஓராண்டாக யாரும் பார்க்க வரவில்லை! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய தனிமை... இறுதியில் மகள், மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தாரா?

கணவரும் மகனும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால், தாட்ஷாயிணி வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எப்போது உயிரிழந்தார் என்பது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், எலும்புக்கூட்டின் நிலையை வைத்து அவர் இறந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிய போலீசார்

கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்கள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பகலகுண்டே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.300 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த குட் நியூஷ்!!!