ஆட்டோ பயணத்தின் போது ஐடி இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு! ஆட்டோ ட்ரைவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.... இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்..!!!
பெங்களூருவின் மாரத்தஹள்ளி பகுதியில் நடந்த ஒரு சாதாரண ஆட்டோ பயணம், ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிவையே மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவ்யா, ஆட்டோ ஓட்டுநருடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு ஆச்சரியமான முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டோ பயணத்தில் தொடங்கிய உரையாடல்
மாரத்தஹள்ளியைச் சேர்ந்த காவ்யா, தனது பயணத்திற்காக மஞ்சுநாத் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். பயணம் முடிந்ததும் கட்டணமாக 200 ரூபாய் வழங்கிய அவர், வழக்கமான நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மஞ்சுநாத், தினசரி செலவுகள் அனைத்தும் கழித்த பிறகு சராசரியாக 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளார். அவரது இந்த நேரடியான பதில் காவ்யாவை யோசிக்க வைத்துள்ளது.
வருமான கணக்கு ஏற்படுத்திய ஆச்சரியம்
ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் என்றால் மாதத்திற்கு சுமார் 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என காவ்யா மனதில் கணக்கிட்டுப் பார்த்துள்ளார். பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குக் கூட இந்த அளவிலான சம்பளம் கிடைப்பதில்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆட்டோ ஓட்டுநர் என்ற தொழிலில் இருந்தாலும், தனது உழைப்பின் மூலம் சுயமாக முன்னேறி வருவதும், வருமானம் குறித்து வெளிப்படையாகப் பேசியதும் காவ்யாவை கவர்ந்துள்ளது.
தாயிடம் தெரிவித்த திருமண முடிவு
ஆட்டோவில் இருந்து இறங்கிய உடனேயே காவ்யா தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, தனக்கான வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டதாகவும், இனி மாப்பிள்ளை தேட வேண்டிய அவசியமில்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சாதாரண பயணத்தின் போது நடந்த உரையாடல், திருமண முடிவு வரை சென்றதாகக் கூறப்படும் இந்த சுவாரசியமான கதை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வேலை முடிந்து வீடு திரும்பியும் நிம்மதி இல்லை! தூக்கத்தை துளைத்த இளம்பெண் செய்த தரமான சம்பவம்! நள்ளிரவில் அலறிய அதிகாரிகள்.!!!