பிரியாணி, ஐஸ்கிரீம் சாப்பிட்டு AC கார்ல தூங்கினதால் 6 வயது மகள் இறந்ததாக சொன்ன தாய்! ஆனால் பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை...!!!



bengaluru-mother-lover-kill-6-year-old-daughter

பெங்களூரு அருகே 6 வயது சிறுமி மரணம் தொடர்பாக நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தனது காதல் உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பெற்ற மகளையே தாயும் அவரது காதலனும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தாயை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை

தாவணகெரே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளான வெண்ணிலா வயது 6. தகவலின்படி, பிரியங்காவுக்கு கல்லூரி கால நண்பரான மோகனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் பிரவீன் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், கணவரிடம் விவாகரத்து கோரி வந்த பிரியங்கா, இளைய மகள் வெண்ணிலாவை மட்டும் அழைத்துக்கொண்டு மோகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: பெட்ரூமில் பிருந்தா தேவியுடன் கணவனை அந்தக்கோலத்தில் பார்த்த மனைவி! தலைக்கேறிய வெறியால் நடந்த தகராறு.... தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!!!

திடீர் மரணம் என கூறிய தாய்

கடந்த மார்ச் 24-ம் தேதி, மகள் திடீரென உயிரிழந்துவிட்டதாக பிரவீனிடம் பிரியங்கா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலில் பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்த பிறகு, ஏசி காரில் தூங்கியபோது குழந்தை இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் மகளின் மரணத்தில் சந்தேகம் அடைந்த பிரவீன், பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்று தனது மருத்துவர் உறவினரிடம் ஆய்வுக்காக அனுப்பியுள்ளார். அந்த ஆய்வில், உணவு காரணமாக அல்லாமல் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

இதையடுத்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பிரவீன் போலீசில் புகார் அளித்தார். வழக்கை மீண்டும் விசாரித்த கர்நாடக போலீசார், பிரியங்கா மற்றும் மோகன் இணைந்து சிறுமியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கண்டறிந்துள்ளனர்.

மேலும், குழந்தை அவர்களின் உறவுக்கு தடையாக இருந்ததாகவும், இதுவே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மோகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பிரியங்காவை பிடிக்க தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: பெண்ணுடன் லிவ்- இன்- உறவில் இருந்த 50 வயது நபர்! 26 நாட்களில் 6 லட்சம் காலி... தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாததால் காதலி போட்ட மாஸ்டர் பிளான்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி...!!