தமிழகம்

குறிஞ்சிப்பாடி ஆசிரியையை கொலை செய்த இளைஞர் அனுப்பிய குறுஞ்செய்தி; கொலையின் பின்னணி என்ன?

Summary:

behind cudalore teacher murder

கடலூர், குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை எஸ்.ரம்யா (23) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை 8.30 மணியளவில் காயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வந்த ஆசிரியை ரம்யாவை பின்தொடர்ந்து வந்த விருதகிரிகுப்பத்தைச் சேர்ந்த கே.ராஜசேகர் (24) என்பவர் ரம்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவின் கழுத்தை வெட்ட முயன்றுள்ளார். அப்போது ரம்யா அதனை கையால் தடுக்கவே முதலில் அவரது கை விரல் துண்டாகி உள்ளது. மேலும் தொடர்ந்து கத்தியால் ரம்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் ராஜசேகர். 

அதனை தொடர்ந்து பள்ளியை விட்டு வெளியில் வந்த ராஜசேகர் தனது அக்காவின் மொபைல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். அதில், "என்னை இனி யாரும் தேட வேண்டாம். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என அனுப்பியுள்ளார் அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து கிளம்பிய ராஜசேகரை இதுவரை காணவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் ரம்யாவின் தாயார், "விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் எங்கள் வீட்டுக்கு வந்து ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். அதன் பின்னர் ரம்யா பள்ளி செல்லும்போது வழி மறித்து, தன்னை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜசேகர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ரம்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தான் ரம்யா பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே இந்த சம்பவத்துக்கும், ராஜசேகருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Advertisement