கடற்கரையில் காணாமல் போன குழந்தை.. 150 சிசிடிவி கேமரா.. 36 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்! குவியும் பாராட்டுக்கள்



baby-rescued-in-36-hrs-missed-in-besant-nagar-beach

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காணாமல் போன கைக்குழந்தையை 36 மணி நேரத்தில் கண்டுபிடித்து தாயிடம் சேர்த்துள்ளனர் சென்னை அடையாறு காவல்துறையினர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கைக்குழந்தையை காணவில்லை என்று பெண் ஒருவர் அடையாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன் பேரில் அடையாறு துணை ஆணையர் பகலவன் தலைமையிலான தனிப்படையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Besant nagar beach

அவர்கள் அந்த பகுதியில் இருக்கும் 150 சிசிடிவி கேமராக்களை முற்றிலும் ஆய்வு செய்துள்ளனர். கடைசியில் 36 மணி நேரங்களுக்கு பிறகு காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்துள்ளனர். மேலும் குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை காவல்துறையினரின் இந்த வெற்றிகரமான செயலை திருநெல்வேலி துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையை எப்போது எந்த இடத்திலிருந்து மீட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை.