20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி..? முதற்கட்ட விசாரணையில் வெளியான ஷாக் தகவல்.!

20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி..? முதற்கட்ட விசாரணையில் வெளியான ஷாக் தகவல்.!


Avinashi bus accident today

அவினாசி அருகே இன்று காலை நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகியுள்ள நிலையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூங்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் இருந்து கேரளா சென்ற கேரளா அரசு பேருந்து திருப்பூர் வழியாக சென்றநிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவினாசி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது, எதிரே சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் உடைத்துச் சென்று பேருந்தின் மீது மோதியது.

Avinsi accident

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த கண்டெய்னர் பேருந்தின் ஒரு பகுதியில் விழுந்ததில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நெருங்கி பேருந்தின் ஓட்டுநர் உட்பட 20 பேர் உயிர் இழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ள நிலையில், லாரி ஓட்டுநர் தூக்கத்தில் கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தலைமறைவாக இருக்கும் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.