தமிழகம்

அட கொடூர மிருகமே.... ஈவு இரக்கமே இல்லையா.? ஆட்டோவில் சென்ற மூதாட்டியை சீரழித்த ஆட்டோ டிரைவர்.!

Summary:

அட கொடூர மிருகமே.... ஈவு இரக்கமே இல்லையா.? ஆட்டோவில் சென்ற மூதாட்டியை சீரழித்த ஆட்டோ டிரைவர்.!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த துருவம் பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கே.வி.குப்பம் சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு  மகேந்திரன் என்பவரின் ஆட்டோவில் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மகேந்திரன் செல்லும் வழியில் திடீரென காட்டுப் பகுதிக்கு சென்று ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

பின்னர் ஆட்டோவில் பயணித்த மூதாட்டியை மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளான். இதனால் பயந்துபோன அந்த மூதாட்டி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். 

இந்தநிலையில் அந்த மூதாட்டி உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, போலீசாரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை மூதாட்டி கூறியுள்ளார். இதனையடுத்து  ஆட்டோ டிரைவர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.


Advertisement