தமிழகம்

என்ன நடக்க போகிறதோ?. தமிழகம் நிச்சயம் வெள்ளத்தில் மூழ்கும்!. புயல் மன்னனின் தகவலால் பரபரப்பு!.

Summary:

என்ன நடக்க போகிறதோ?. தமிழகம் நிச்சயம் வெள்ளத்தில் மூழ்கும்!. புயல் மன்னனின் தகவலால் பரபரப்பு!.


2018ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் என புயல் ராமச்சந்திரன் கணித்து கூறியிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருட இறுதி நெருங்க நெருங்க அனைவருக்குமே இருக்கின்ற பதற்றம் மழையை பற்றியது தான். வருகின்ற 7ம் தேதி  ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால் மக்கள் பயந்துபோய் இருக்கின்றனர்.

இந்நிலையில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வானிலையை கணித்து சொல்லும் புயல் ராமச்சந்திரன் சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் தமிழகம் மிதக்கும் என கணித்து கூறியிருந்தார்.

இதற்கு முன்னர் வரை இவர் கூறிய வானிலை கணிப்பு இதுவரை பொய்யானதாக இல்லை எனவும் கூறியிருப்பதால், அனைவரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம் வரும் என தான் கணித்ததாகவும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக மதுராந்தகம் தொடங்கி தென் தமிழகம் வரை பலத்த மழை பொழியும் என்றும், வெள்ளப் பாதிப்பு நிச்சயம் எனவும் அடித்துக் கூறியிருக்கிறார். இதனால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Advertisement