ஒரு குடும்பமே காலியான சம்பவம்.. ஆசையாய் வளர்த்த மகள் காதலுடன் சென்றதால் தந்தை விஷம் குடித்து.. தாய் தூக்கில் தொங்கியபடி மரணம்..!

ஒரு குடும்பமே காலியான சம்பவம்.. ஆசையாய் வளர்த்த மகள் காதலுடன் சென்றதால் தந்தை விஷம் குடித்து.. தாய் தூக்கில் தொங்கியபடி மரணம்..!


an-incident-where-a-family-is-empty-the-father-drank-po

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியில் ஆசையாய் வளர்த்த அன்பு மகள் காதலனுடன் சென்று கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனவேதனை அடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சின்னதுரை-சங்கரம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் காளிமுத்து என்ற வேறு ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

Daughter intermarriage

இதனால் விரக்தி அடைந்த பேச்சியம்மாளின் பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். தங்களது ஆசை மகள் வீட்டை விட்டு சென்று வேறு ஜாதி பையனை திருமணம் செய்து கொண்ட துக்கம் தாங்காமல் தந்தை சின்னதுரை விஷம் அருந்தியும், தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக எஸ்.பி பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.