ஆம்பன் புயலால் எந்தந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது தெரியுமா?



ampan-puyal-rain-places

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆக மாறி நாளை புயலாக வலுப்பெறுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும் இப்புயல் 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு திரும்பி வடகிழக்கு திசையிலும் நகர்கிறது. இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

அதுமட்டுமின்றி இந்த புயல் காரணமாக மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், லட்சத்தீவு குமரி கடல், தென் கிழக்கு அரபிக் கடல் போன்ற பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.