விளையாட்டு வினையானது; 1 வயது சகோதரியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 3 வயது சகோதரி.!

அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ கவுண்டி, பால்பரூர் பகுதியில் வீட்டில் இருந்த 3 வயது குழந்தை துப்பாக்கியை வைத்து விளையாடி இருக்கிறது.
குழந்தை எதிர்பாராத விதமாக துப்பாக்கியை அழுத்தியதில், குழந்தையின் சகோதரியான 1 வயது குழந்தையின் உடலில் குண்டு பாய்ந்துள்ளது.
தலையில் காயமடைந்த ஒருவயது குழந்தை அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.