"தாயின் உயிரைப் பறித்த மது வெறி... " குடிக்க பணம் தர மறுத்த தாய் எரித்து கொலை.!! மகன் வெறி செயல்.!!



alcoholic-son-burned-mother-to-death

மது குடிக்க பணம் தராததால் தாய் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ராஜேந்திரன். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இது தொடர்பாக விக்டர் ராஜேந்திரனுக்கும் அவரது தாய் எஸ்தருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

tamilnadu

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த விக்டர் ராஜேந்திரன், தனக்கு மது அருந்த பணம் தருமாறு கேட்டு தாயை நச்சரித்துள்ளார். ஆனால் மது அருந்த அவரது தாய் எஸ்தர் காசு கொடுக்கவில்லை. இதனால் வெறியின் உச்சத்திற்கு சென்ற விக்டர் ராஜேந்திரன் தாய் என்றும் பார்க்காமல் மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் அலறி துடித்திருக்கிறார் எஸ்தர்.

இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் எஸ்தரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது மகன் விக்டர் ராஜேந்திரனை கைது செய்தனர். மது வெறியின் காரணமாக தாய் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "தலைக்கேறிய போதையில் தாய் மீது பாய்ந்த மகன்..." அடித்தே கொன்ற தந்தை.!!