வேட்டியை மடித்துக்கட்டி அம்மாவை பாதுகாத்தவர் எடப்பாடி பழனிச்சாமி - அதிமுக எம்.எல்.ஏ அதிரடி பேட்டி.!

தமிழகத்தில் பெரும் விஸ்வரூப பிரச்சனையாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை தொடர்பான விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் வைத்து, அன்றைய ஆளும் கட்சியான திமுகவினரால் அவமதிக்கப்பட்டார். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக உறுப்பினர்களுக்கு எதிராக ஜெயலலிதாவுக்கு நடந்த பிரச்சனையை மேற்கோளிட்டு பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், ஜெயலலிதாவுக்கு அப்படியான பிரச்சனை ஒன்று நடைபெறவே இல்லை. அது ஜெயலலிதாவின் திட்டமிட்ட நாடகம் என பிரசுரம் செய்து வருகின்றனர். அதனை நேரில் பார்த்து கொதித்ததாக இன்றைய அதிமுக முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "துரைமுருகன் தான் அவ்வாறான சர்ச்சையை செய்தார்.
அன்று திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அம்மாவை பாதுகாத்த காரணத்தால் தான் அவர்களை தலைமை பொறுப்புக்கு அன்று ஏற்றுக்கொண்டனர். அதே நாளில் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, அம்மா தாக்கப்பட்ட சமயத்தில் இளமை பருவத்தல் இருந்த இ.பி.எஸ் வேட்டியை மடித்துக்கட்டி அம்மாவை காப்பாற்றி கொண்டு வந்தார். அம்மாவை பாதுகாத்ததில் அவரும் ஒருவர்" என தெரிவித்துள்ளார்.