மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! தொடர்ந்து 4 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.!

மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! தொடர்ந்து 4 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.!


Again rain in tamilnadu

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர், காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனைத் தொடர்ந்து அந்தமானில் நாளை (சனிக்கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 15-ந்தேதி (திங்கட்கிழமை) உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.