தமிழகம்

ஒருவழியாக 2 மாதங்களுக்கு பின் நடந்த திருமணம்! அடுத்த சில நிமிடங்களிலேயே மணமக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

After marriage Groom found corono positive

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவருக்கு விருதுநகரைச் சேர்ந்த நசீமா பானு என்பவருடன் திருமணம் செய்ய இருவீட்டாராலும்  நிச்சயிக்கப்பட்டு கடந்த இருமாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்நிலையில் கொரோனோவால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. அதனை தொடர்ந்து  ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் விதிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் மணப்பெண் நசீமாபானு வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இதற்காக சென்னையில் இருந்து முகமது ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகருக்கு வந்துள்ளார். அப்பொழுது முகமது ஷெரீப் உடலிலிருந்து, விருதுநகர் எல்லையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முகமது ஷெரீபுக்கும் நசிமா பானுவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பரிசோதனையில் முகமது ஷெரீப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அவர் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் மணமகள் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement