அரசியல் தமிழகம்

கார் விபத்தில் சிக்கிய மற்றொரு அதிமுக எம்.பி; அடுத்தடுத்த அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Summary:

ADMK MP Kamaraj met accident

நேற்று விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் விபத்தில் சிக்கியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சேலம் நோக்கி சென்றுள்ளார். இவர் தானாகவே காரினை ஓட்டிச் சென்றுள்ளார். 

மின்னாம்பள்ளி அருகே சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதன்மீது மோதாமல் செல்ல முயன்றுள்ளார் காமராஜ். அப்போது காரில் பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய அவருக்கு கைகளில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். அருகிலுள்ள காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக எம்பிக்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது அதிமுகவினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement