அதிமுக-வின் முக்கிய அமைச்சரின் மனைவி காலமானார்! சோகத்தில் அதிமுகவினர்!



admk-minister-os-maniyan-wife-passed-away

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச் செல்வி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகிலுள்ள ஓரடியம்புலம் ஆகும். ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

os maniyan wife

வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி கலைச்செல்வி இன்று மருத்துவமனையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.