ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
செல்லாது... செல்லாது.. அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிரடி தீர்ப்பு.! பட்டாசு வெடித்து கொண்டாடும் ஓபிஎஸ் தரப்பு.!

ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தனி கூட்டம் கூட்டக் கூடாது எனவும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பானது எடப்பாடி தரப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. இந்தநிலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.