அரசியல் தமிழகம் சினிமா

மிஸ்டர் சீமான், மொத்தத்தையும் வெளியிடட்டுமா? நாம் தமிழர் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த விஜயலக்ஷ்மி!

Summary:

Actress vijayalakshmi talk about seeman

தனது மரணத்துக்கு சீமான்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என நடிகை விஜயலக்ஷ்மி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ப்ரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் ஒங்கிணைப்பாளர் சீமான் மீது, பல புகார்களை அடுக்கடுக்காக வைத்துள்ளார். மேலும், சமீபத்தில் இரு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

பலமுறை தன்னைக் கொலை செய்ய முயற்சி நடத்ததாக நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்த நிலையில், ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிடுவதாக எச்சரித்துள்ளார். மேலும், எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

மேலும் நாம் தமிழர் கட்சியில் இதுக்கும் மகளிர் அமைப்பினர் சீமானிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறும் விஜயலக்ஷ்மி கூறியதற்கு, அக்கட்சியின் மேடை பேச்சாளரான காளியம்மாள் விஜயலட்சுமியை பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள விஜயலக்ஷ்மியும், நானும் சளித்தவர் அல்ல. நீ காளியம்மாள் என்றால் நான் உனக்கு ஆத்தாள்!. சீமான் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்... இல்லாவிட்டால் மொத்தத்தயும் வெளியிடுவேன்  என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


Advertisement