நகை கடையில் அபேஸ்... ஆட்டையை போட்ட மேலாளர் கைது..!Abbess in jewelry store... manager arrested

திருப்பத்தூர் அருகே நகை கடையில் 10 கிலோ வெள்ளி நகைகளை கடையின் விற்பனை பிரிவு மேலாளர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி சீ.எல் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நகை விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர்  சித்திகாபாத் பகுதியை சேர்ந்த ரியாஸ் .

Jewellery store

இவர் தான் பணியாற்றிய நகை கடையில் இருந்த 10 கிலோ வெள்ளி நகைகளை திருடி உள்ளார். மேலும் இதனை சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களுடன் கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாசிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரியாசுக்கு நகைகளை திருட உடந்தையாக இருந்ததாக கூறி சபீனா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.