குடோனுக்குள் குதூகலம்.. காதலிக்கு மஞ்சள் தாலிகட்டி மனைவியாக்கிய இளைஞன்.. இது 2 கே கல்யாணம்.!

வேலைபார்க்கும் இடத்தில் காதலிக்கு காதலன் தாலிகட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
காலங்கள் மாற மாற கோலங்கள் மாறியதோ இல்லையோ, எதிர்கால சந்ததியின் சீரழிவு கண்முன் நடந்து வருகிறது. திரைப்பட காதலை வாழ்க்கையாக எண்ணி ஆர்வக்கோளாறில் திருமணம் செய்து வாழ்க்கையை நடத்த சிரமப்பட்டு பிரியும் 75 % காதல் திருமணங்கள் இன்றளவில் நடந்து வருகிறது.
இவை திரைமறைவில் மறைக்கப்பட்டு இருவரும் வெவ்வேறு துணையை ஒருகட்டத்தில் தேடிக்கொள்ளும் சோகமும் நடக்கிறது. இந்த நிலையில், குடோன் போன்ற இடத்திற்குள் காதலிக்கு காதலன் பட்டு உடையணிந்து மஞ்சளில் கோர்க்கப்பட்ட தாலியை காட்டுகிறார். காதலியும் தனது காதலன் தாலிகட்டும் சந்தோஷத்தில் மிதக்க, காதலன் தாலியை கட்டி வெட்கப்பட்டு மிதக்கிறார்.
இருவரும் வெட்கத்தில் தனித்தனியே செல்ல, வீடியோ எடுக்கும் பெண்மணியோ இருவரும் அருகில் இருந்தால் என்ன குத்தமா? என்பதை போல குரல் எழுப்ப, இருவரும் நெருங்கி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ எங்கு? எப்போது? யாரால் எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.