பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!
கடலூரில் பரபரப்பு.. காதலனை கரம்பிடிக்க பெண்ணாக மாறிய ஆண்.. குடும்பம் நடத்தி விட்டு கழட்டி விட்ட காதலன்.. அதிர்ச்சி பின்னணி..!
கடலூரில் பரபரப்பு.. காதலனை கரம்பிடிக்க பெண்ணாக மாறிய ஆண்.. குடும்பம் நடத்தி விட்டு கழட்டி விட்ட காதலன்.. அதிர்ச்சி பின்னணி..!

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் அந்த வாலிபர் வினோத் குமாரை அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினாள் நாம் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி வினோத் குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறி உள்ளார். மேலும் தனது பெயரை வினோதினி என்று மாற்றியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர் வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்துவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடும் செய்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து பதறிப்போன வினோதினி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதனை தடுத்து நிறுத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொய் நம்பிக்கை அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கடலூர் கலெக்டர் அலுவலகம் வந்து வினோதினி தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட போலீசார்கள் வினோதினியை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.