இறப்பிலும் ஒரு உயிர்ப்பு!! விபத்தில் மூளைச் சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகம் வாலிபருக்கு பொருத்தம்..!

இறப்பிலும் ஒரு உயிர்ப்பு!! விபத்தில் மூளைச் சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகம் வாலிபருக்கு பொருத்தம்..!


a-resurrection-even-in-death-the-kidney-of-an-old-man-w

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 19ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச் சாவு அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முதியவரின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்றுள்ளனர்.

Suffered brain death

இதனைத்தொடர்ந்து முதியவரின் சிறுநீரகம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு 1 மணி நேரத்திற்குள் விரைந்து கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து வரும் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வாலிபர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.