வாய்த்தகராறு காரணமாக நண்பனை கல்லால் தாக்கி கொன்ற நபர் கைது.!
மதுராந்தகம் அணைக்கட்டு அருகிலுள்ள குன்னத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொக்லைன் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கடந்து 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பெருமாளின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று குழந்தைகளுடன் தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் மனைவியின் பிரிவை ஏற்க முடியாமல் பெருமாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பெருமாள் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் குன்னத்தூர் சாலையோர பாலத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களுக்குள்ளே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த மகேந்திரன் பெருமாளை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வாய் தகராறில் நண்பனை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.