அடக் கொடுமையே... 8 ஆம் வகுப்பு மாணவிக்கு சிகரெட் சூடு... விபச்சாரத்தில் தள்ளிய தாய்... 8 பேர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!



a-mother-and-her-relatives-arrested-under-pocso-for-for

மதுரை அருகே எட்டாம் வகுப்பு மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி  வன்கொடுமை செய்து வந்த தாய் சித்தி உட்பட  எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் பழுதிடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சார்ந்த  13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் பிரிந்து சென்றதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கோடை விடுமுறை நடைபெற்று வந்ததால் மகள் விடுமுறையில் தன்னோடு இருக்க வேண்டும் எனக் கூறி அவரது தாய் அழைத்துச் சென்றிருக்கிறார்.

tamilnadu

சம்பக் குளத்தில் உள்ள தாய் வீட்டில் சிறுமியின் தாய் அவரது பெரியம்மா மற்றும் சித்தி ஆகியோர் 13 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து  அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். மேலும் சிலர் சிறுமிக்கு சிகரட்டால் சூடும் வைத்துள்ளனர்.

இந்தக் கொடுமைகள் எல்லாம் தாங்க முடியாமல் அந்த நரகத்திலிருந்து தப்பி வந்த சிறுமி  பாட்டியிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பாட்டி தல்லாகுளம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சிறுமியின் பெரியம்மா சித்தி, சித்தி மகன்  சிறுமியின் தாய்  உட்பட எட்டு பேரை போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.