68 வயதில் சல்லாப ஆசை.. முதியவருக்கு கும்மாங்குத்து.. கதறவிட்ட உறவினர்கள்.. என்னா அடி..!
குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக பெண்ணை படுக்கைக்கு அழைத்த முதியவருக்கு சரமாரி அடி பரிசாக கொடுக்கப்பட்டது.
கணவன்-மனைவி:
சென்னையில் உள்ள புழல், சூரபட்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்மணி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதமாக பெண் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!
காவல்துறை விசாரணை:
இதனிடையே, இளம்பெண்ணுக்கு கணவர் தொல்லை கொடுத்த காரணத்தால், பட்டாபிராம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மகேஷ் கன்னவிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
வழக்கறிஞர் என பேச்சு:
இந்நிலையில், கடந்த பிப்.10ம் தேதி பெண்ணுக்கு தொடர்பு கொண்ட 68 வயதுடைய நபர் ஒருவர், தன்னை மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என அறிமுகம் செய்துள்ளார். மேலும், குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். ஒருகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருக்கிறார்.
பாலியல் தொல்லை:
இதற்காக தன்னுடன் விடுதிக்கு வந்து இரவில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அங்குள்ள சங்கீதா ஹோட்டலுக்கு பெண்ணை வரசொல்லிய நிலையில், சங்கீதா ஹோட்டலுக்கு உறவினர்களுடன் சென்றுள்ளார். பெண் முதலில் ஞானப்ரகாஷ் என்ற முதியவரிடம் பேச்சு கொடுத்தபடி இருந்தார்.

கும்மாங்குத்து சம்பவம்:
கணவன் மீதான கோபத்தில் அழைத்ததும் வந்துவிட்டாரே என குஷியில் இருந்த ஞானப்ரகாஷின் ஞானம் தெளியும் அளவுக்கு திடீரென படைபலத்துடன் வந்த பெண்ணின் உறவினர்கள் முதியவரை சரமாரியாக வெளுத்தெடுத்தனர்.
பதறிப்போன ஊழியர்கள்:
ஹோட்டல் ஊழியர்கள் நடப்பது என்ன என தெரியாமல் திகைக்க, பெண்ணின் உறவினர்கள் நிலைகுலைந்துபோன ஞானப்ரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பதிலுக்கு பதில் குற்றசாட்டு:
சென்னை நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்று இருக்கிறார். இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த நபர், பெண்ணை படுக்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் அதே வேளையில், ஞான பிரகாஷை பெண்ணின் உறவினர்கள் திட்டமிட்டு வழக்கில் சிக்க வைத்திருப்பதாக குற்றசாட்டு முன்வைத்துள்ளனர்.