2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
28 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த 68 வயது திமுக நிர்வாகி!
28 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த 68 வயது திமுக நிர்வாகி!

திருவண்ணாமலை மாவட்டம் சாவல் பூண்டி பகுதியைச் சேர்ந்த 67 வயது நிரம்பிய சுந்தரேசன் என்பவர் பல ஆண்டுகளாக திமுகவில் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய அபிதா என்ற பட்டிமன்ற பெண் பேச்சாளரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அதன் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்தநிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் சுந்தரேசன் அபிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை சுந்தேரசன் திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.