ஊரடங்கு நேரத்தில் நண்பர்களை கூட்டி பட்டா கத்தியில் கேக்கை வெட்டி கொண்டாடிய நபர்.! போலீசார் அதிரடி நடவடிக்கை.!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழுஊரடங்கை அறிவித்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்களுக்கும் தங்கள் உயிரை பணயம் வைத்து சுட்டெரிக்கும் வெயில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் ஒன்று கூடி நடுரோட்டில் பட்டா கத்தியால் கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த சுனில்குமார் என்ற 18 வயது இளைஞன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமார் மற்றும் அவருடைய நன்பர்கள் 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பட்டா கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.