பாவம்.!! அதுவும் உயிர்தானே!! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 5 ஆயிரம் கோழிகள்.. மொத்ததும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்..

பாவம்.!! அதுவும் உயிர்தானே!! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 5 ஆயிரம் கோழிகள்.. மொத்ததும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்..


5000 chicks burned over fire accident near Perambalur

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்தாயிரம் கோழிகள் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் கோழிப்பண்ணை நடத்திவருகிறார் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (45). இவரது கோழிப்பண்ணையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகளை வாங்கி வளர்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென பெரியசாமியின் கோழிப்பண்ணையில் தீப்பிடித்து மொத்த கோழிப்பண்ணையும் தீக்கிரையானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனாலும் கோழிப்பண்ணையில் இருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கோழிப்பண்ணைக்கு அருகில் இருந்த விவசாய நிலத்தில் கிடந்த சோளத்தட்டைக்கு விவசாயி ஒருவர் வைத்த தீ கோழிப்பண்ணைக்கு பரவியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்..