பாவம் அந்த இளைஞன்.. இப்படியா செய்வது? ஏடிஎம்மில் பணமெடுக்க நீண்ட நேரமாக்கியதால், வெளியே காத்திருந்தவர்கள் செய்த மோசமான காரியம்!!

பாவம் அந்த இளைஞன்.. இப்படியா செய்வது? ஏடிஎம்மில் பணமெடுக்க நீண்ட நேரமாக்கியதால், வெளியே காத்திருந்தவர்கள் செய்த மோசமான காரியம்!!



5 person attack youngman for delaying to take money

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையிலுள்ள மங்கலம் என்ற மலைகிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். 30 வயது நிறைந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் ஏலகிரிமலை புங்கனூர் பகுதியில் உள்ள  ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அவர் அங்கு  தன்னிடம் இருந்த 4 ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ரூ.46 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

கணேஷ் பணம் எடுக்க நீண்ட நேரமானதால் ஏடிஎம்மிற்கு வெளியே பணம் எடுக்க காத்திருந்த 5 பேரும் ஆத்திரமடைந்து உள்ளே சென்று அவரிடம் தரக்குறைவாக மோசமாக பேசியுள்ளனர். இதனால் கணேஷ் மற்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த 5 பேரும் ஒன்று சேர்ந்து கணேஷை தாக்கி அவரிடம் இருந்த செல்போன், 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.

ATM

இந்த நிலையில் கணேஷை தாக்கி பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடிய ஐந்து பேரையும் கைது செய்ய வேண்டும் என அவரது மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஏலகிரி காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து போலீசார் கணேஷிடம் விசாரணை மேற்கொண்டு, பின் அந்த ஐந்து பேர் குறித்தும் விசாரித்துள்ளனர். 

 இந்த நிலையில் அந்த 5 பேரும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தவர்கள் எனவும் புங்கனூர் பகுதியில் ஹோட்டலில் தங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.