
திருநங்கையை கிண்டல் செய்த விவகாரத்தில் 5 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெ
திருநங்கையை கிண்டல் செய்த விவகாரத்தில் 5 பேர் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ஐயப்பன். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ஐயப்பன் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த திருநங்கைகளை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த திருநங்கைகள் இந்த சம்பவத்தை அதே பகுதியைச் சேர்ந்த தங்களுக்கு தெரிந்த இளைஞர்கள் சிலரிடம் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனை கண்டிக்க சென்ற அந்த 5 இளைஞர்களும் அவரை சராமரியாக தாக்கியதோடு கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத ப்ரசித்தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைது செய்ததோடு, அந்த திருநங்கைகளிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement